1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 5 டிசம்பர் 2025 (18:58 IST)

கண்ணில் ரத்தக் கசிவு: நீரிழிவு, இரத்த அழுத்தம் காரணமா?

கண்ணில் ரத்தக் கசிவு: நீரிழிவு, இரத்த அழுத்தம் காரணமா?
கண்ணுக்குள் ரத்தக் கசிவு ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் ஆகும்.
 
நீரிழிவு நோயின்போது, விழித்திரையில் ஆக்ஸிஜன் குறைவதால் இயல்புக்கு மாறான புதிய ரத்த குழாய்கள் உருவாகி, அவை கசியும் தன்மையுடன் இருப்பதால் ரத்தக் கசிவு ஏற்படுகிறது. உயர் ரத்த அழுத்தத்தின் போது, ரத்தக் குழாய்கள் சுருங்கி விழித்திரையின் மையப் பகுதியில் நீர் கோத்து, ரத்தக் குழாய்கள் வெடிக்க வாய்ப்புள்ளது.
 
முதலில் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வருவது அவசியம். அதன் பிறகு, பாதிப்பின் தீவிரத்திற்கேற்ப  புதிய ரத்தக் குழாய்கள் உருவாவதைத் தடுக்கலாம் மேலும்   விழித்திரை விலகல் போன்ற தீவிர நிலைமைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யலாம்.
 
சரியான நேரத்தில் சிகிச்சை மேற்கொண்டு, அடிப்படை நோய்களை கட்டுப்படுத்துவதன் மூலம் பார்வையை பாதுகாக்கலாம்.
 
Edited by Mahendran