1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Updated : புதன், 20 ஏப்ரல் 2022 (14:57 IST)

முடி உதிர்தலை தடுப்பதோடு வளர்ச்சிக்கு உதவும் சோற்று கற்றாழை ஜூஸ் !!

Aloe Vera
கற்றாழை முடிக்கு சிறந்த வகையில் பயன்படுகிறது. முடிக்கு ஒரு இயற்கையான கண்டிஷனராக பயன்படுகிறது. முடியை பிரகாசமாக வைத்துக்கொள்ள கற்றாழை மிகவும் பயன்படுகிறது.


முடியை மென்மையாக்கவும் வலிமையாக்கவும் கற்றாழை பயன்படுகிறது. தலையில் அதிக எண்ணெய் சுரத்தல் அல்லது வறட்சியாக இருத்தல் போன்ற பிரச்சனைகளுக்கு கற்றாழை ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது.

கற்றாழை முடி உதிர்தலை தடுப்பதோடு மட்டுமல்லாமல் முடிக்கு அழகையும் ஆரோக்கியத்தையும் தந்து முடியை பாதுகாக்கிறது. சோற்றுக் கற்றாழையில் வைட்டமின் ஏ, சி, இ மற்றும் அனைத்து விதமான தாதுக்களும் இருக்கிறது. சருமத்திற்கும், முடி வளர்ச்சிக்கும் இது நல்லது.

கொழுப்பை குறைக்கும். ரத்த அழுத்தத்தை சீராக்கும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். நரம்புகளுக்கு ஊட்டம் அளிக்கும். புற்று நோய் வராமல் தடுக்கும்.

இந்த ஜூஸை தொடர்ந்து பத்து நாட்கள் பருகி விட்டு பின்னர் 10 நாட்கள் இடைவெளி விட்டு மறுபடியும் 10 நாட்கள் தொடர்ந்து பருகலாம். சோற்று கற்றாழை ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள்: சோற்றுக் கற்றாழை ஜெல் - 2 டீஸ்பூன், தேன் - 1 ஸ்பூன், தண்ணீர் - தேவையான அளவு.

Hair Growth

செய்முறை: சோற்றுக் கற்றாழை தோலை முழுவதுமாக நீக்கி அதில் உள்ள ஜெல்லை எடுத்து நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். சுத்தம் செய்த சோற்றுக் கற்றாழை ஜெல்லை மிக்சியில் போட்ட அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த ஜூஸில் தேன் கலந்து சாப்பிடவும். சூப்பரான சோற்றுக் கற்றாழை ஜூஸ் தயார்.

குறிப்பு: இதை கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும், 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் சாப்பிடக் கூடாது.