செரிமான மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டால் மனநலமும் பாதிக்குமா?
செரிமான மண்டலத்தில் ஏற்படும் பாதிப்புகள் மன நலனையும் பாதிக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவு பழக்கங்களால் குடலில் பாதிப்பு ஏற்படுவதாகவும், இதனால், ஜீரணமாகாத உணவுத் துகள்கள் மற்றும் நச்சு பொருட்கள் இரத்தத்தில் கலந்து, மலச்சிக்கல் மற்றும் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்துகின்றன என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குடலானது உடலின் இரண்டாவது மூளையாக செயல்படுகிறது. எனவே, மனநிலை மாற்றங்கள் மற்றும் மன தெளிவுக்கு குடல் ஆரோக்கியம் இன்றியமையாதது. இந்த பிரச்னைக்குத் தீர்வாக, தினமும் 25 கிராம் நார்ச்சத்தை உணவில் எடுத்துக்கொள்வது அவசியம் என்றும், குடல் நலனை பேணுவது மன ஆரோக்கியத்திற்கு முக்கியம் என்றும் அனைவருக்கும் வலியுறுத்தப்படுகிறது.
Edited by Mahendran