1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

மூல நோய்க்கு நல்ல நிவாரணம் தரும் நட்சத்திர பழம் !!

அஜீரண கோளாறு வாயுவின் சீற்றம் அதிகமாக இருக்கும்போது மூலநோய் உண்டாகிறது. இந்த மூல நோயின் பாதிப்பிலிருந்து விடுபட இந்த நட்சத்திர பழத்தை இரவு சாப்பிட்டு வந்தால் மூல நோய் குணமாகும்.

தாது உப்புகள், நரம்புகள் மற்றும் தசைகளின் செயல்பாடுகளை சீராக்கி வலுப்படுத்த இந்த பழம் பயன்படுகிறது. எடையைக் குறைப்பவர்களுக்கு இந்தப் பழம் நல்ல பலனைத் தருகின்றது. சரும பிரச்சனை முதல் மூல பிரச்சனை வரை அனைத்திற்கும் தீர்வை அளிக்கும்.
 
நட்சத்திர பழம் கிடைக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் ரத்த ஓட்டமும் சீராகும்.
 
இப்பழத்தில் வைட்டமின் சி அதிக அளவு இருப்பதால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. இதில் உள்ள வைட்டமின் சி சளி, இருமல், காய்ச்சல், வைரஸ் தொற்று ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கிறது.
 
நட்சத்திர பழத்தில் உள்ள பொட்டாசியம் உயர்ரத்த அழுத்தத்தை சரி செய்து இதயத்தைப் பாதுகாக்கிறது.