1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. குழந்தை வளர்ப்பு
Written By Sasikala

பாலூட்டும் தாய்மார்கள் கவனத்தில் கொள்ளவேண்டியவை என்ன...?

மழை மற்றும் குளிர்காலத்தில் தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும். ஆதலால் பாலூட்டும் தாய்மார்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். 

உடலில் நீர்ச்சத்து நிரம்பி இருப்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். ஊட்டச்சத்துமிக்க உணவுகளை உட்கொள்ள வேண்டும். எண்ணெய் வகை உணவுகள், காரமான மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
 
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ளவும் வேண்டும். அறையின் வெப்பநிலையை சீராக பராமரிக்க வேண்டும். குளிர் காலங்களில் தாயும்-சேயும் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் கவனமுடன் செயல்பட வேண்டும். 
 
பாலூட்டும் தாய்மார்கள் தினமும் காலையில் மிதமான சுடுநீரில் எலுமிச்சை சாறு கலந்து பருகிவருவது நல்லது. அது செரிமான செயல்பாடுகளையும், குடல் இயக்கத்தையும் ஒழுங்குபடுத்த உதவும். மேலும் எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி சத்து நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவும்.
 
சூப்கள் பருகுவது செரிமானத்தை எளிதாக்கும். பூண்டு, இஞ்சி போன்றவை பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டவை என்பதால் சமையலில் அவற்றை தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும். 
 
வைட்டமின்கள், கால்சியம், இரும்பு, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிடுவது பால் உற்பத்தியை அதிகரிக்க உதவும்.