1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வருவதால் கிடைக்கும் அற்புத பலன்கள் !!

ரத்த சோகை போன்ற பிரச்சனையால்  அவதிப்படுகிறவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் இந்த பீட்ரூட் ஜூஸை குடித்து வர ரத்த சோகை விரைவில் குணம் ஆகும்.

கல்லீரலை புதுப்பிக்கும் பீட்ரூட் ஜூஸை குடித்து வர இதில் இருக்கக்கூடிய ஆன்டி-ஆக்ஸிடன்ட் கல்லீரல் செல்கள் பாதிப்படைவதைத் தடுப்பதோடு புதிய செல் உற்பத்திக்கு உதவி செய்கிறது.
 
ரத்த ஓட்டம் சீராகும் பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரேட் உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து ரத்தக் குழாய்களில் ரத்த ஓட்டத்தை சீராக்கும் இதன் மூலமாக ரத்த அழுத்தம் சீராக இருக்கும்.
 
இரத்த அழுத்தத்தினால் அவதிப்படுறவங்க பீட்ரூட் ஜூஸை குடித்து வர ரத்த ஓட்டமும் சீராக இருக்கும் மட்டும் பிபி போன்ற பிரச்சினைகள் வருவது தடுக்கப்படும்.
 
பீட்ரூட் ஜூஸ் நச்சுக்களை வெளியேற்றி குடலை சுத்தமாக்கும். இதன் மூலமாக பிற நோய்கள் வருவது தடுக்கப்படுவதோடு உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.  புற்றுநோய் வராமல் தடுக்கும். 
 
தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வர இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதோடு இதன் மூலம் உடலில் ஏற்படக்கூடிய பல்வேறு வகையான நோய்கள் வருவது தடுக்கப்படும். 
 
உடல் எடையை குறைக்கும் பீட்ரூட் ஜூஸில் கலோரிகள் குறைவு ஆனால் நார்ச்சத்து அதிகம் மற்றும் கொழுப்புகள் கிடையாது அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள் தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வர இது உடலில் இருக்கக்கூடிய தேவையில்லாத கொலஸ்ட்ராலை குறைத்து உடல் எடையை குறைக்க உதவி செய்யும்.