திங்கள், 15 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

சப்ஜா விதைகளை இவ்வாறு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் !!

சப்ஜா விதைகளிலும் மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அவை பித்தத்தை குறைக்கும். உடல் சூட்டை நீக்கும். இந்த விதைகளை நீரில்  ஊறவைத்து பயன்படுத்த வேண்டும். இது நீரை உறிஞ்சி வழுவழுப்பாக மாறும் இயல்புகொண்டது.

அதிக வெயிலால் உடல் சூடு அதிகரித்து சூட்டுக் கட்டிகள் கண் எரிச்சல் போன்றவை அதிகரித்து விடும். இதற்கு சிறந்த தீர்வு இந்த சப்ஜா விதை.  சப்ஜா விதையை ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொண்டு ஒரு 200 எம்எல் தண்ணீரில் போட்டால் அது தண்ணீரை உறிஞ்சிக் கொண்டு ஜல்லி போட்டு ஒட்டி விடும் இதை அப்படியே குடிக்கலாம் அல்லது காய்ச்சிய பாலில் அல்லது தண்ணீரில் கலந்தும் குடிக்கலாம்.
 
வயிற்றுப் புண் பிரச்சினைக்கு சப்ஜா விதை ஒரு நல்ல மருந்து பொதுவா அல்சர் என்று சொல்லப்படுகிற வயிற்றுப் புண் வந்தால் நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் ஏற்படும். இதைத் தொடர்ந்து அடிக்கடி புளித்த ஏப்பம் உண்டாகும். பசியே இருக்காது. கொஞ்சம் சாப்பிட்ட உடனேயே வயிறு நிரம்பிய உணர்வு உண்டாகும்.
 
சிறுநீர் பாதையில் ஏற்படும் புண், நீர் எரிச்சல் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதலுக்கும் இது நல்ல மருந்து. இது உடல் சூட்டை  குறைத்து, உடலை சீரான சீதோஷ்ண நிலைக்கு கொண்டுவரும் இயல்புகொண்டது.
 
மலச்சிக்கல் பிரச்சினை பொதுவாக கோடையில் அதிக வியர்வையின் காரணமாக நீர் இழப்பு ஏற்படக் கூடும் இதனால் மலம் இறுகி மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இந்த மலச்சிக்கலைப் போக்கும் அருமையான வைத்தியம் இந்த சப்ஜா விதை காரணம் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கலைப் போக்கி விடும்.
 
சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் ஒரு டீஸ்பூன் சப்ஜா விதை நீரில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறையும் அதே போன்று மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சப்ஜா விதையை நீரில் போட்டு ஒரு மணி நேரம் வரை ஊற வைத்து சாப்பிட்டால் நோயின் பாதிப்பு குறையும்.