செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 28 ஏப்ரல் 2022 (17:19 IST)

பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை தீர்க்கும் மருந்தாகும் கசகசா !!

பாதாம் பருப்பை ஊறவைத்து அதோடு கசகசா சேர்த்து அரைத்து, பாலில் கலந்து சிறிது பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வர ஆண்மை அதிகரிக்கும்.


கசகசாவுடன் கற்கண்டு வால் மிளகு வாதுமைப்பருப்பு அனைத்தையும் சம அளவு எடுத்துக் கொண்டு இடித்து நெய்யில் அதை தேன் சேர்த்து பிசைந்து லேகியம் போன்று பதத்துடன் வைத்துக்கொண்டு தினமும் காலை மாலை 5 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் விந்து இழப்பு மற்றும் மூல நோய்கள் குணமாகும்.

ஆண்மையை அதிகரிப்பதோடு கருவுறுதலை அதிகரிக்கின்றது. பெலோபியன் குழாய்களில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்து சரி செய்வதாகும் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

கசகசா ஜாதிக்காய் இரண்டையும் சம அளவு சேர்த்து அரைத்து பனகற்கண்டு ஓடு பாகுப்போல் காய்ச்சி அதில் தேனையும் கலந்து தினமும் 5 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும்.

கசகசா விதையை உணவில் சேர்ப்பதால் செரிமான கோளாறுகள் நீங்குகிறது. கசகசா விதையைப் பவுடராக்கி சூடான பாலில் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் கொடுக்கும்.

கசகசாவை தேங்காய் துவையல் சேர்த்து அரைத்து நெய் சேர்த்து உணவுடன் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு குணமாகும் ஆண்களுக்கு விந்து கெட்டிப்படும்.