வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 28 ஏப்ரல் 2022 (14:02 IST)

ஏராளமான மருத்துவ குணங்களை உள்ளடக்கிய கொள்ளு !!

கொள்ளு நம் உடலுக்கு அதிக சத்துக்களை கொடுக்க கூடியது. இதில் புரதச்சத்து, நார்ச்சத்து, கார்போஹைட்ரெட், இரும்புச்சத்து, மேலும் பாஸ்பரஸ், பொட்டாசியம் என பல சத்துக்கள் உள்ளன.


கொள்ளுவை உணவில் சேர்ப்பதால் உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்கும். இரவில் ஒரு கைப்பிடி கொள்ளுவை எடுத்து தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் குடித்து வந்தால் உடலில் உள்ள கொழுப்புகளை குறைத்து உடல் எடையை குறைக்கும்.

கொழுப்பை குறைப்பதில் கொள்ளுவிற்கு முக்கிய பங்கு உள்ளது. குதிரைக்கு இது பிரத்யேக உணவு. அதனால் தான், குதிரை கொழுப்புக் கூடாமல் இறுக்கமான உடல் தோற்றத்துடன் இருக்கிறது. அதிவேகமாக ஓடுகிறது, இதன் காரணமாகதான் இதை, ‘குதிரைக் கொள்ளு’ என்றும் சொல்கிறார்கள்.

கருப்பு கொள்ளை ரசம் வைத்து சாப்பிட்டால் சிறுநீரகத்தில் உள்ள உப்புக்களை வெளியேற்றி சிறுநீரகத்தை பாதுகாக்கும். அதேபோல் சிறுநீரக கற்களை வெளியேற்ற கூடியது. சிறுநீரக கற்களை வெளியேற்றுவதால் அடிவயிற்று வலி இருக்காது.

கொள்ளுவை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து அந்த நீரைப் பருகினால், ஜலதோஷம் குணமாகும். கொள்ளு ரசம் வைத்து சாப்பிட்டால், காய்ச்சலை குணமாக்கும். மேலும் வாரம் இரண்டு முறை கொள்ளு ரசம் வைத்து சாப்பிட்டால் உடல் வலி, ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்னைகள் குணமாகும்.

கொள்ளுவை உணவில் சேர்ப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஏனென்றால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தேவையான ஊட்டச்சத்துக்கள் இதில்  உள்ளன. கொள்ளுவை அரிசியுடன் சேர்த்து கஞ்சி வைத்து சாப்பிடலாம்.