வியாழன், 28 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 28 ஏப்ரல் 2022 (10:51 IST)

உடலுக்கு தேவையான பல நன்மைகளை அள்ளித்தரும் உலர் திராட்சை !!

Dried grape
கருப்பு, பச்சை, கோல்டன் என்று மூன்று கலர்களில் உலர் திராட்சை கிடைக்கிறது. இவற்றில் வைட்டமின் பி, சி, ஃபோலிக் அமிலம், இரும்புச்சத்து, கரோட்டீன்கள், லுடீன், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன.


உலர் திராட்சையை தண்ணீரில் ஊறவைத்து, அதன் பின்னர் சாப்பிட்டால் மிகச் சிறந்த பலன்களை பெறலாம்.

பச்சை திராட்சைப் பழத்தில் இருக்கும் வைட்டமின் சத்துக்களை விட, உலர் திராட்சையில் அதிக அளவு சத்துக்கள் உள்ளது. உலர் திராட்சையில் மனித உடலுக்கு தேவையான பல நன்மைகள் நிரம்பி உள்ளன.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு ரத்தசோகை ஏற்படும். இவர்கள் தினமும் உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை நோய் சரியாகும்.

உணவு செரிமானத்தை எளிதாக்க உலர் திராட்சை மிகவும் உதவுகிறது. நற்பகலில் நீங்கள் அதிக அளவில் உணவை சாப்பிட்டால், பின்னர் சிறிது உலர் திராட்சையை சாப்பிடுவது மிகவும் நல்லது.

உலர் திராட்சையை தினமும் உட்கொண்டால் உடல் சூடு தனித்து, உடல் எடை அதிகரிக்கும். மேலும் ரத்தத்தை சுத்திகரிக்க உலர் திராட்சை மிகவும் உதவுகிறது.

உலர் திராட்சையில் பொட்டாசியம் அதிக அளவு உள்ளது. இந்த பொட்டாசியம் உடலில் ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்த உதவுகிறது.