வியாழன், 31 அக்டோபர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 28 ஏப்ரல் 2022 (14:50 IST)

ரோஜா குல்கந்து சாப்பிடுவதால் என்னவெல்லாம் நன்மைகள் உண்டு தெரியுமா...?

Rose Gulkand
ரோஜா குல்கந்து சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் வெகுவாக குறையும். இதயம் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும்.


ரோஜா குல்கந்திற்கு வயிற்றில் இருக்கும் செரிமான அமிலங்களின் சம நிலையை சீர் செய்யும் சக்தி அதிகம் உள்ளது. மேலும் பசியை மேம்படுத்த உதவுகிறது. கர்ப்பிணிப் பெண்களும் மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க ரோஜா குல்கந்து சாப்பிடலாம்.

ரோஜா குல்கந்தை சாப்பிடும் ஆண்களுக்கு உடல் குளிர்ச்சி அடையும், விந்தணுக்கள் பெருக்கம் ஏற்பட்டு மலட்டுத்தன்மை நீங்கும்.

மாதவிடாய் காலத்தில் சில பெண்களுக்கு ரத்த போக்கு அதிகரிப்பதும், அடிவயிற்று வலி ஏற்படுவதும் உண்டு. இத்தகைய காலங்களில் பெண்கள் காலையில் ரோஜா குல்கந்து சாப்பிடலாம்.

மாதவிடாய் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். குறிப்பாக PCOD நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது சிறந்த மருந்தாக விளங்குகிறது.

குல்கந்து வயிறு கோளாறுகளை நீக்கும். உடலின் பித்த அளவை சீராக்குகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கும். அதிக அமில சுரப்பை குறைக்கும்.

அல்சர்களுக்கு மருந்தாகும். வயிற்றில் வெப்பத்தை குறைத்து, வயிற்றுப்புண், குடல்புண்கள் குணப்படுத்த உதவுகிறது.

ஒரு டீஸ்பூன் குல்கந்துவை தண்ணீரில் கலந்து குடித்து, அதில் உள்ள ரோஜா இதழ்களை மென்று சாப்பிடலாம். குளிர்ந்த பாலில், ஒரு டீஸ்பூன் குல்கந்துவை கலந்து குடிக்கலாம். குல்கந்துவை அப்படியே சாப்பிடலாம் அல்லது வெற்றிலையில் வைத்து மடித்து சாப்பிடலாம்.