திங்கள், 25 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 11 ஜூலை 2022 (09:52 IST)

அற்புத மருத்துவகுணங்களை கொண்ட மாதுளம் பூ !!

Pomegranate flower
மாதுளைச் செடியின் இலை கொழுந்து, பூ பிஞ்சு, பழம், விதை, பட்டை வேர் அனைத்துமே மருந்தாகப் பயன்படுகிறது.


மாதுளம் பூவை இடித்து சாறு பிழிந்து, ஒரு அவுன்ஸ் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் அரை அவுன்ஸ் சுத்தமான தேனையும் சேர்த்து கலக்கி காலை மற்றும் மாலையில் சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும்.

10 மாதுளம் பூவை எடுத்து சுத்தம் செய்து, அதை நசுக்கி ஒரு சட்டியில் போட்டு, இரண்டு தம்ளர் தண்ணீர் விட்டு, ஒரு தம்ளராக வற்றும் வரைக் காய்ச்சி அக்கஷாயத்தில் ஒரு டீஸ்பூன் தேன் விட்டு 20 நாட்கள் காலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால், பித்த சம்பந்தமான எல்லா வியாதிகளும் குணமாகும்.

ஆரோக்கியமான உடல் நலம் பெற விரும்புபவர்கள் மாதுளம் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடைந்து ஆரோக்கிய உடல் கிடைக்கும்.

கருப்பை நன்கு வலுவடைய மாதுளம் பூவை கஷாயம் செய்து காலை வேளையில் அருந்திவந்தால் கருப்பை வலுவடையும் அது மட்டுமல்லாது மாதவிலக்கு நிற்கும் காலமான மொனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு அதிகமான மன உளைச்சல் உண்டாகுவதுடன் கை, கால், இடுப்பு மூட்டுகளில் வலி உண்டாகும்இ வர்கள் மாதுளம் பூவை நிழலில் காயவைத்து இடித்து பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை இருவேளையும் அருந்தி வந்தால் இப்பிரச்சனை நீங்குவதுடன் வெள்ளை படுதலும் குணமாகும்.

சிலருக்கு வயிற்றில் வாயுக்களின் சீற்றத்தால் சிறிது சாப்பிட்டதும் வயிறு நிறைந்தது போல் காணப்படுவதுடன் பசி என்பதே இவர்களுக்கு தோன்றாது எனவே இவ்வாறான பிரச்சினை உடையவர்கள் மாதுளம் பூவை கஷாயம் செய்து பனைவெல்லம் சேர்த்து அருந்தினால் வாயுக்கள் சீற்றம் குறையும்.