வியாழன், 23 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 11 ஜூலை 2022 (09:42 IST)

அதிகமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள மிளகு !!

pepper
மிளகில் வெண் மிளகு, பச்சை மிளகு, சிவப்பு மிளகு, கரு மிளகு என நான்கு வகைகள் உள்ளது. அடிக்கடி ஏற்படும் இருமல் தொல்லைக்கு மிளகு நல்ல மருந்தாக செயல்படுகிறது.


மிளகுத் தூளுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். கரு மிளகு இருமல் சளிக்கு மிகவும் நல்ல மருந்து.

முகப்பரு அதிகம் உள்ளவர்கள் சந்தனம், ஜாதிக்காயுடன் மிளகு சேர்த்து அரைத்து, பருக்கள் உள்ள இடத்தில் பற்று போட்டு வந்தால், விரைவில் பருக்கள் நீங்கும்.

மிளகுத் தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கி வந்தால் பல் வலி, ஈறுகளில் ரத்தம், வாய் துர்நாற்றம், சொத்தைப் பல் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

மிளகுடன் சிறிது வெல்லம் சேர்த்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைவலி, தலைபாரம் நீங்கும். மிளகை அரைத்து தலையில் பற்று போட்டால் தலைவலி குணமாகும்.

ரத்தசோகை பிரச்சனை உள்ளவர்கள் கல்யாண முருங்கை, முருங்கை இலை, மிளகு, பூண்டு ஆகியவற்றை சேர்த்து அவித்து சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை குணமாகும்.

மிளகை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் உணவு எளிதில் செரிமானமாகும். செரிமானத் தொந்தரவுகள் நீங்கும். மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றும்.

மிளகுத் தூளுடன் வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து தலையில் புழு வெட்டு உள்ள இடத்தில் தடவி வந்தால் முடி நன்றாக வளரும்.