அதிக இனிப்பு சுவை கொண்ட சீத்தாப்பழத்தின் மருத்துவ பயன்கள் !!
சீத்தாப்பழம் ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த சக்தியை தரும் டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. சித்த மருத்துவத்தில் இதன் இலை, தோல், விதை, மரப்பட்டை ஆகியவை பயன்படுத்தப்படுகிறது.
சீத்தாப்பழம் பழவகைகளில் தனிப்பட்ட சுவையும், மணமும் உடையது. குளுகோசும், சுக்ரோசும் சம அளவில் இருப்பதால் அதிக இனிப்பு சுவையை தருகிறது. நினைவாற்றலை அதிகரிக்கும், இதில் உள்ள சத்துக்கள் இதயத்தை சீராக இயங்க உதவுகிறது.
காசநோயை குணமாக்கும், குடல் புண்களை குணமாக்கும். உடல் சோர்வை போக்கும். சீத்தாப்பழம் இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
சீத்தா இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் கஷாயம் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்துகிறது. மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு இதன் இலை அருமருந்தாகும். இலைகளை அரைத்து புண்களுக்கு மேல் பூசி வர உடனடியாக குணமாகும். பூண்டுடன் சீத்தாப்பழத்தை சேர்த்து அரைத்து தேமல் மீது பூசிவர தேமல் மறையும்,
பாசிப்பயறு, வெந்தயம் இரண்டையும் இரவில் ஊறவைத்து காலையில் அரைத்து அதில் சீத்தா விதை பொடியை சேர்த்து கலந்து தலையில் தேய்த்து 15 நிமிடங்களுக்கு ஊற வைத்து பிறகு குளித்து வர பொடுகு மறையும்.
சீத்தாப்பழச்சாறு அருந்தி வர சரும வறட்சி நீங்கும். நரம்புகள் வலுவடையும். இதில் வைட்டமின் சி கணிசமான அளவு இருப்பதால் சளி பிடிக்காமல் தடுக்கிறது. சளி பிடித்தவர்கள் சாப்பிட்டாலும் சளியை குணமாக்கும், வேறு பாதிப்புகளை தராது.