உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் அதிகம் நிறைந்துள்ள அவரைக்காய் !!
அவரைக்காயில் இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை சரியான அளவில் வைத்திருக்க உதவுகிறது.
அவரைக்காய் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கண் நரம்புகள் குளிர்ச்சி அடையும். பார்வை மங்கல் போன்ற பிரச்சனைகளை நீக்கும். அவரைக்காயில் உள்ள துவர்ப்பு சுவை ரத்தத்தை சுத்தப்படுத்தும். ரத்த நாளங்களில் உள்ள கொழுப்பை குறைக்கும்.
நீரிழிவு நோயால் உண்டாகும் தலை சுற்றல், மயக்கம், கை கால் மரத்துப்போதல் போன்ற பிரச்சனைகளுக்கு அவரைக்காய் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
மூலநோய் தாக்கம் உள்ளவர்கள், மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.
அவரைக்காய்களில் கால்சியம் சக்தி அதிகம் உள்ளது. வாரம் ஒரு முறை அல்லது இருமுறை அவரைக்காய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வருவது, பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகரிக்கும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, சருமத்தில் உண்டாகும் பாதிப்பு, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளுக்கு அவரைக்காய் அற்புதமான மருந்து.
முற்றிய அவரைக்காய் மற்றும் வெண்டைக்காய் இரண்டையும் சேர்த்து சூப் வைத்து அருந்தினால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
அவரைக்காயில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் அதிகம் இருக்கின்றன. இது உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் பிராண வாயுவை கிரகிக்கும் தன்மையை அதிகப்படுத்துகிறது. இதனால் உடலுக்கு அதிக உற்சாகமும், எளிதில் உடல் சோர்வு அடையாத நிலையை தருகிறது. எனவே குழந்தைகள், பெரியோர்கள் என அனைவரும் அவரைக்காய் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.