1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 9 ஜூலை 2022 (17:02 IST)

மக்காச்சோளத்தில் நிறைந்து காணப்படும் சத்துக்கள் என்ன...?

corn
மக்காச்சோளத்தை பெரும்பாலும் சோளப்பொரி செய்யவே பயன்படுத்துகின்றனர். மக்காச்சோளத்தில் சரியான அளவில் கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகளை கொண்டது. 

மக்காச்சோளத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கும். மேலும் பார்வைக்கோளாறு ஏற்படாமல் தடுத்து கண்களை பாதுகாக்கும் தன்மை கொண்டது.
 
சோளம் குறைந்த அளவு கொழுப்பினை கொண்டது. இது இதய ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக இருப்பதோடு, இதயம் சம்பந்தபட்ட நோய்களையும் வராமல் உதவி புரிகிறது.
 
மக்காசோளம் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான ஆபத்தை குறைக்கிறது. கார்போஹைட்ரேட் மற்றும் புரதம் மக்காசோளத்தில் நிறைந்து காணப்படுவதால் மனஅழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது. 
 
இரும்புச்சத்து அதிகம் உள்ள சோளத்தை பச்சையாகவோ அல்லது வேறு முறைகளிலோ சாப்பிட்டு வந்தால் உடலில் சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தி அதிகரித்து, இரத்த சோகை குறைபாடு விரைவில் நீங்கும்.
 
சோளத்தில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
 
மக்காசோளம் அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கொழுப்பு சத்துக்களை கொண்டுள்ளதால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை தவிர்த்து, உணவு செரிமானமாக உதவி புரிகிறது.