1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 17 மார்ச் 2022 (18:26 IST)

சரும பிரச்சனைகள் அனைத்தும் குணமாக்கும் வேப்பிலை !!

வேப்பமரத்தின் குச்சி, பட்டை, இலை, பூ, பழம், கொட்டை என அனைத்திலும் அதிகபடியான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.


வேப்பிலையில் பல நன்மைகள் உள்ளன. முக்கியமாக வைட்டமின் E, கரோட்டினாய்டு.இது மூட்டு வலி, முதுகு வலி, தசை வலி என எல்லாவற்றிற்கும் உதவக்கூடியது வேப்பிலை.

இவையெல்லாம் தவிர ஃபேக்டிக் அமிலம் வேப்பிலையில் உள்ளது. ஃபேக்டி அமிலம் எதற்கு உதவுகிறது என்றால் நம்முடைய தோல் இருதயப் பிரச்சினை வராமல் இருப்பதற்கு உதவுகிறது.

வேப்பம் பழத்தில் செய்யும் சர்பத்தை சாப்பிட்டால் பித்தம் தணியும், ரத்தம் சுத்தமடையும். தோல் சம்பந்தப்பட்ட நோயுள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், சொறி, சிரங்குகளை உற்பத்திச் செய்யும் நுண்கிருமிகள் அழியும்.

வேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து, பின் ஆறிய தண்ணீரை கொண்டு முகம் மற்றும் கை, கால்கள் கழுவி வந்தால் சரும பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.

வேப்பம் விதையுடன் வெல்லம் சேர்த்து காலை மற்றும் மாலை என ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் உள் மூலம், வெளி மூலம் தீரும். மாதம் ஒரு முறை வேப்பிலையை சாப்பிட்டால் வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறும். வாந்தி, மயக்கம் போன்றவை குணமாகும்.

எந்த வகையான கிருமியாக இருந்தாலும் சரி, குடலில் இருந்தாலும் சரி, நாம் சாப்பிட்டாலும் சரி, உடம்பில் தடவினாலும் சரி, கிருமி நாசினித் தன்மை வேப்பிலைக்கு அதிகம் உள்ளது.