இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க விடாமல் தடுக்கும் நாவல் பழம் !!
நாவல் பழத்தில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. நாவல் பழம், வேர், பட்டை என அனைத்துமே பயன்தரக்கூடியது.
நாவல் பழத்தின் இலையை பொடியாக்கி பற்களை துலக்கி வந்தால், ஈறுகள், பற்கள் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும். மேலும் நாவல் பழம் சாப்பிடுவது வாய் துர்நாற்றம் ஏற்படுவதை தடுக்க்கும்.
நாவல் பழக்கொட்டைகளில் இருக்கும் ஜாம்போலைன் மற்றும் ஜாம்போசைன் என்ற இரண்டு வேதிமூலக்கூறுகள் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க விடாமல் தடுக்கின்றன. இதனால் சர்க்கரை அளவு சீராகி, சர்க்கரை வியாதியை முழுவதும் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
வயிற்றுப்போக்கினால் அவஸ்தைப்படுபவர்கள், நாவல் பழத்தினை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும். மேலும் வயிற்றில் தங்கியிருக்கும் நச்சுகள் மற்றும் கிருமிகளை வெளியேற்றும்.
நாவல் பழங்களை சிறிது உப்பு சேர்த்து காலையில் சாப்பிட்டு வந்தால், கல்லீரல் பிரச்சனைகள் நீங்கும், மேலும் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
நாவல் பழத்தின் இலைகள் அல்லது மரப்பட்டைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை பருகிவந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும்.