செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 17 மார்ச் 2022 (12:11 IST)

சிறுநீரக கற்களை கரைத்து வெளியேற்ற உதவும் மருத்துவ குறிப்புகள் !!

சிறுநீரக கற்களை சிறுகச்சிறுக கரைத்து வலி இல்லாமல் வெளியேற்றும். சிறுநீரக நோய்கள் வராமல் பாதுகாக்கும். சிறுநீரக எரிச்சலை கட்டுப்படுத்தும்.


சிறுநீரக துர்நாற்றத்தை போக்கும். இவ்வாறு பல அறிய மருத்துவ குணங்கள் இருப்பதால், இது எண்ணற்ற நோய்களுக்கு அருமருந்தாக விளங்குகிறது.

உணவின் ருசியை அதிகமாக்கி நாவில் இருக்கக்கூடிய சுவை அரும்புகளை மலர செய்கின்ற ஆற்றல் உள்ளது. இது தாது வெப்பத்தை அதிகரிக்காமல் கட்டுப்படுத்தும். சூட்டினால் ஏற்படுகின்ற சிறுநீரக நோய்களை போக்கும். உடலிற்கு குளிர்ச்சி தரும்

நெருஞ்சில் விதை 20 கிராம், கொத்தமல்லி விதை 20 கிராம், நீர் 200 மி.லி. செய்முறை: நீரை அடுப்பில் வைத்து காய்ச்சி அதில் நெருஞ்சில் விதை 20 கிராம், கொத்தமல்லி விதை 20 கிராம் இரண்டையும் இடித்து நீரில் போட்டு கொதிக்க விடவும். 200 மி.லி தண்ணீர் 100 மி.லி ஆகும் வரை கொதிக்க விடவும்.

பின்னர் வடிகட்டி எடுத்து கொள்ளவும். இதை தினமும் ஒருவேளை உணவுக்கு பின் பருக வேண்டும். 10 அல்லது 15 நாட்கள் பருகி வந்தால் படிப்படியாக சிறுநீரகத்தில் படிந்துள்ள கற்கள் கரைந்து வெளியேறும்.