செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

இயற்கையான முறையில் கொசுக்களை விரட்ட வழிகள்...!

வீடுகளில் கொசுக்களை விரட்ட கெமிக்கல்கள் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துகின்றோம். அத்தகைய கொசு விரட்டிகளை  பயன்படுத்துவதால், சருமம் மற்றும் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, நுரையீரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
வீட்டின் ஒரு பக்கத்தில் நெருப்பு வைத்து அதில் மாம்பூக்களைப் போட்டால், அதில் இருந்து வரும் புகை கொசுக்களை விரட்டிவிடும்.
 
ஒரு எலுமிச்சையை பாதியாக வெட்டவும். பின்னர் அந்த பாதியில் கிராம்பை நெருக்கமாக சொருகவும், வீட்டில் கொசு வரும் இடங்களில் வைக்கவும். ஒரு கொசு கூட இந்த எலுமிச்சை, கிராம்பு வாசனைக்கு வராது.
 
வேப்பிலை, நொச்சி இலை ஆகியவற்றை உலர்த்தி, நெருப்பில் போட்டுப் புகைக்கவைத்தால், கொசுத் தொல்லை இருக்காது.
 
ஒரு மண் சட்டியில், தீக்கனல் போட்டு, பச்சை வேப்பிலை அதன் மேல் மஞ்சள் தூள் தூவி விட்டால், அதிலிருந்து வெளியேறும் புகை  மூட்டம், கொசு மட்டுமின்றி, மழைக் காலத்தில் வரக்கூடிய மற்ற பூச்சிகளையும் கட்டுப்படுத்தும். இந்தப் புகை, குளிர் காலத்தில் நமக்கு  வரக்கூடிய மூச்சுப் பாதை கோளாறை சரி செய்யும். சுற்றுசூழலுக்கு எந்த கேடும் ஏற்படுத்தாது.
 
நாய்த்துளசி பூவை உலர்த்தித் தூள் செய்து சாம்பிராணியுடன் சேர்த்துப் புகைக்கவைத்தால், கொசுத் தொல்லை தீரும்.