கொத்தமல்லி இலையை பயன்படுத்தி முகத்தை பளபளப்பாக்கும் டிப்ஸ்...!!

தினமும் 2 டீஸ்பூன் கொத்தமல்லி சாறு மற்றும் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் தடவி 1/2 மணி நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவினால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் குணமாகும்.

முகப்பரு நீங்க எளிய முறையில் நம் வீட்டில் அதிகம் பயன்படுத்தும் கொத்தமல்லி தீர்வாகிறது. முகப்பரு தொல்லை இருந்தால் ஒரு கப்  தண்ணீரில் கொஞ்சம் கொத்தமல்லி மற்றும் சிறிதளவு சீமைச்சாமந்தி பூ அல்லது எண்ணெய் மற்றும் கொஞ்சம் எலுமிச்சை சாறு இவற்றை அனைத்தையும் ஒன்றாக கலந்து முகத்தில் தடவி ஒரு அரை மணி நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ முகப்பரு குணமாகும்.
 
முகத்தில் உள்ள சிவப்பு தடிப்புகள் குணமாக 2 டீஸ்பூன் கொத்தமல்லி சாறு, 2 டீஸ்பூன் தக்காளி சாறு மற்றும் 2 டீஸ்பூன் ரோஸ்வாட்டர் இவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் தடவினால் முகத்தில் ஏற்படும் சிவப்பு தடிப்புகள் குணமாகும்.
வாரத்தில் இரண்டு முறை கொத்தமல்லி இலையை அரைத்து தலையில் தேய்த்து வந்தால் தலைமுடி உதிர்வு கட்டுப்படுத்தப்படுகிறது. இதை தொடர்ந்து செய்து வந்தால் தலைமுடி உதிர்வு முழுமையாக தடுக்கப்பட்டு தலைமுடி அடர்த்தியாகவும், மிகவும் பொலிவுடனும் இருக்கும்.
 
தினமும் இரவில் தூங்கும் முன் கொத்தமல்லி இலை சாறு எடுத்து உதட்டில் தடவி வந்தால், மென்மையாக இருப்பதுடன் மிகவும்  பொலிவுடனும் காணப்படும்.
 
சருமம் மென்மையாக கொத்தமல்லி இலை, தயிர் மற்றும் கற்றாழை ஜெல் ஆகியவற்றை நன்றாக அரைத்த பின் ஒரு டீஸ்பூன் அரிசி மாவு  சேர்த்து ஒன்றாக கலந்து முகத்தில் தடவி வந்தால், உங்கள் முகம் மிகவும் மென்மையாகவும், பட்டு போன்றும் காணப்படும்.


இதில் மேலும் படிக்கவும் :