வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

தண்ணீரை இயற்கையான முறையில் சுத்திகரிக்க சில வழிகள்...!!

மாசடைந்த நீரைச் சுத்திகரிக்க சில இயற்கை முறைகள் உள்ளன. இன்றையச் சூழலில் நோய்களிலிருந்து தப்பிக்க தண்ணீரைக் காய்ச்சி குடிக்கவேண்டியது மிக அவசியம். வெந்நீரைக் குடித்தாலே செரிமானத் தொந்தரவுகள், உடல் வலி போன்றவை நீங்கி, நீண்ட ஆயுள் கிடைக்கும்.
மண்பானை சுத்திகரிப்பு: மண்பானையில் தண்ணீரைச் சேமித்துவைத்துப் பருகலாம். குளிர்ச்சி தருவதோடு சேர்த்து, நீரை இயற்கையாகச்  சுத்திகரிக்கும் திறனும் மண்பானைக்கு உண்டு. மண் பானையில் குடிநீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால், அந்தத் தண்ணீரில் உள்ள மாசுப் பொருள்கள் பலவற்றையும் மண்பானை உறிஞ்சிவிடும். அதன் பின்னர் நமக்கு தூய நீரானது  கிடைக்கிறது.
செம்புவினால் சுத்திகரிப்பு: செம்புக் குடத்தில் இரண்டு முதல் ஐந்து மணி நேரம் தண்ணீரை ஊற்றி வைப்பது மூலமாகத் தண்ணீரில் உள்ள மாசுகளை அகற்றி, நுண்கிருமிகளை அழித்து தண்ணீரை சுத்தப்படுத்தலாம். மண்பானையில் செப்புக் காசுகளைப் போட்டு வைப்பதன்  மூலமாகவும் தண்ணீரை சுத்தப்படுத்தலாம்.
 
தேற்றான் கொட்டை: தேற்றான் கொட்டை ஊறிய நீர், மாசுகள் அகன்று தூய நீராக மாறும். சமையலுக்கு உபயோகிக்கக்கூடிய தண்ணீரிலோ, குடிக்கும் தண்ணீரிலோ தேற்றான் கொட்டையைப் பொடியாக்கிப் போடலாம். தண்ணீரில் இருக்கக்கூடிய நுண்கிருமி மற்றும் பாக்டீரியாக்களை,  பாத்திரத்தின் அடியில் படிய வைத்துவிடும்.