1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. வியாதிகள்
Written By

நோய்கள் குணமாக தேனை எதனுடன் சாப்பிடுவது நல்லது....?

அருகம்புல்லை தட்டி கசாயம் எடுத்து தேனைக் கலந்து குடித்துவந்தால் பல நோய்களை குணமாக்கும். களைப்பி என்பதே இருக்காது.
கணைச்சூட்டினால் குழந்தைகள் மெலிந்து காணப்படுவர். அவர்களுக்கு தினசரி ஆட்டுப்பாலில் 1 ஸ்பூன் தேனை கலந்து கொடுத்தால் கணைச்சூடு நீங்கி குழந்தைகள் பலம் பெறும்.
 
இளநீரில் தேன் கலந்து அருந்தினால் உடல் சூடு சட்டென்று தணிந்துவிடும். மஞ்சள் காமாலை உள்பட காமாலைநோய் கண்டவர்கள் தினமும் தேன் சாப்பிட்டால் காமாலை குறைவதுடன் பின்விளைவுகளும் இருக்காது.
அத்திப்பழங்களை 48 நாட்களுக்கு தேனில் ஊறவைத்து, தினசரி ஒன்றிரண்டு சாப்பிட்டால் உடல் வலிமைப்பெறும். தேனுடன் காய்ச்சிய பசும்பாலை கலந்து அருந்தினால் உடல் வலிமை அடையும்.தாதுவிருத்தி ஏற்படும்.
 
உடல் குண்டானவர்களை மெலிய செய்யும். உடலுக்கு ஊட்டச்சத்து தரும். சுவாச காச நோய்களை குணமாக்கும். விக்கல் நோயை போக்கும்.
 
இஞ்சியை இடித்து சாறு எடுத்து சிறிது நேரம் வைத்திருந்து அது நன்றாக தெளியும். அதனை தேன் கலந்து அருந்தி வந்தால் வயிற்று செரிமானம் சரியாகும். மேலும் உண்ட உணவு உடனே செரித்துவிடும்.