1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பல்வேறு நன்மைகளை அள்ளித்தரும் கடுகு !!

நியாசின் ரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கும். கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம் போன்ற தாது உப்புக்களும்  கடுகில் உள்ளது. 

இருமலை கட்டுப்படுத்த கூடியதும், விஷத்தை முறிக்கவல்லதும், ஜீரண கோளாறுகளை சரிசெய்ய கூடியதும், ஒற்றை தலைவலியை போக்கும் தன்மை கொண்டதும், விக்கலை கட்டுப்படுத்த கூடியதும், ரத்தத்தை சுத்தப்படுத்த கூடியதுமானது கடுகு. 
 
சமையலுக்கு மிகவும் முக்கியமான பொருளாக விளங்குவது கடுகு. பல்வேறு நன்மைகளை கொண்ட கடுகு உள் உறுப்புகளை தூண்டும் தன்மையை உடையது. பசியை தூண்டக் கூடியது.
 
ஒரு பாத்திரத்தில் சிறிது தேன் விடவும். இதனுடன் லேசாக வறுத்து பொடி செய்த கடுகை சேர்த்து சூடுபடுத்தினால் இளகிய பதத்தில் வரும். இது ஆறியவுடன் சுண்டைக்காய் அளவுக்கு எடுத்து சாப்பிட்டால் இருமல் கட்டுக்குள் வரும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
 
கடுகை பயன்படுத்தி தொடர் விக்கலுக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். கடுகு பொடியில் நீர் விட்டு குலைத்து, அதை மெல்லிய துணியில் வைத்து  தொண்டைக்கு அருகே வைத்தால் விக்கல் சரியாகும்.
 
மஞ்சள் நிற பூக்களை உடைய கடுகு செடியை எளிதாக பயிர் செய்யலாம். கடுகு ஒற்றை தலைவலிக்கு மருந்தாகிறது. ஜீரண கோளாறுகளை சரிசெய்யும் தன்மை  உடையது. கடுகை குறைந்த அளவுக்கே உபயோகப்படுத்த வேண்டும்.
 
அதிகளவில் எடுத்துக் கொண்டால் குமட்டல், வாந்தி ஏற்படும். பூச்சி, வண்டு கடி விஷத்தை முறிக்கும் தன்மை கடுகுக்கு உண்டு.