செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

சரும பராமரிப்பிற்கு உதவும் ஆரஞ்சுத்தோல் எப்படி...?

ஆரஞ்சுத் தோல் மற்றும் வேம்புக் கலவை பருவை எதிர்த்துப் போராட உதவும். இந்த ஸ்கின் பேக் மூலம் எண்ணெய் பசை மிகுந்த மற்றும் பருக்கள் ஏற்படக்கூடிய சருமத்திற்கு நல்ல பலனை பெற முடியும்.

தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி பிரகாசமாக்கவும் ஆரஞ்சு பயன்படுகிறது.
 
ஒரு ஆரஞ்சுப் பழத்தை உரித்து தோலை வெயிலில் காயவைத்துக் கொண்டு 10 முதல் 20 பாதம் பருப்புகளை உடைத்துப் பொடியாக்கிக் கொள்ளுங்கள். இதை தினமும் சிறிதளவு பாலுடன் சேர்த்து பூசி வந்தால் அப்பழுக்கற்ற சருமம் பெற முடியும். தேவைப்பட்டால் இந்த கலவையைக் கொண்டு சிறிதளவு தேன் சேர்த்து  முகத்தில் மசாஜ் செய்யலாம்.
 
ஆரஞ்சுத் தோல் மற்றும் தயிர் கலவை ஒரு அற்புதமான சருமப் பராமரிப்பிற்கு உதவும். இது சுருக்கங்களையும் கோடுகளையும் நீக்குவதோடு உங்கள் சருமத்தின்  இறந்த செல்களை நீக்க உதவுகிறது.
 
1 வேப்பங்கொழுந்துடன், ஆரஞ்சு தோல் விழுது - கால் டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் கால் டீஸ்பூன் கலந்து, எங்கெல்லாம் கருமை படர்ந்து இருக்கிறதோ, அங்கெல்லாம் பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை செய்யுங்கள் கருமை ஓடிவிடும்.
 
ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் சம அளவு எடுத்து அதனுடன் ஆரஞ்சு சாறு  கலந்து,முகம் மற்றும் கழுத்தில் அப்ளை பண்ணி 15 நிமிடம் கழித்து நன்கு கழுவ வேண்டும்.
 
வாரத்திற்கு ஒரு முறை இதை முகத்துக்கு போட்டு வர பியூட்டிபார்லர் போகாமல் பேஷியல் செய்தது போல் முகம்பிரகாசமாக ஜொலிக்கும். ஆரஞ்சு தோல் அரைத்த விழுது கால் ஸ்பூன், கசகசா விழுது ஒரு ஸ்பூன், சந்தனத்தூள் கால் ஸ்பூன் அனைத்தையும் சேர்த்து கெட்டியான விழுதாக்கிக் கொள்ள வேண்டும்.
 
தினமும் இரவு தூங்கப் போகும்போது, பருக்கள் வந்த இடத்தில் அப்ளை பண்ணி காய்ந்ததும் முகத்தை நன்கு கழுவ வேண்டும். இந்த சிகிச்சையால் வடு மறைவதுடன், பருக்களும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும்.