புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

சரும அழகை அதிகரிக்க இரவில் செய்யக்கூடிய சில அழகு குறிப்புகள் !!

தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன் எலுமிச்சை சாறுடன், சிறிதளவு தேன் கலந்து நன்கு சருமத்தில் அப்ளை செய்து 10 நிமிடம் கழித்து, சருமத்தை குளிர்ந்த  நீரில் கழுவி வந்தால், சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்துவதோடு, சருமம் சிவப்பாகவும் மாறும்.

வெள்ளரிக்காயில் இயற்கையாகவே ப்ளீச்சிங் தன்மை கொண்டுள்ளதால், இதனுடன் சிறிதளவு பால் சேர்த்து, சாறாக அரைத்து எடுத்து, தினமும் இரவு தூங்குவதற்கு முன், முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்த பிறகு, குளிர்ந்த நீரில் சருமத்தை கழுவி வந்தால் சருமம் சிவப்பாக காணப்படும்.
 
உருளைக்கிழங்கிலும் உள்ள பிளிச்சிங் தன்மை அதிகமாக இருப்பதால், சருமத்தில் உள்ள கருமையை அகற்ற உதவியாக இருப்பதால், இதை சாறுகளாக அரைத்து எடுத்து, இரவு தூங்குவதற்கு முன்பு தினமும் சருமத்தில் அப்ளை செய்தபின் சில நிமிடம் கழித்து, சருமத்தை கழுவி வந்தால், சருமம் பளபளப்பாக இருக்கும்.
 
அரைஸ்பூன் தேனுடன், ஒரு சிட்டிகை பட்டை பொடியை நன்கு கலந்து தினமும் சருமத்தில், அப்ளை செய்து சில நிமிடம் கழித்து, சருமத்தை குளிர்ந்த நீரில்  கழுவி வந்தால், சருமம் மென்மையாக காணப்படும்.
 
தயிருடன் சிறிதளவு கடலை மாவு கலந்து சருமத்தில் தினமும் தடவி நன்கு மசாஜ் செய்துபிறகு, 10 நிமிடம் கழித்து சருமத்தை கழுவி வந்தால், சருமம் பொலிவுடன் காணப்படும்.
 
இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டருடன், இரண்டு ஸ்பூன் காய்ச்சாத(பிரெஷ் மில்க்) பால் சேர்த்து நன்கு கலந்து தினமும் சருமத்தில் அப்ளை செய்துபிறகு 10 நிமிடம் கழித்து, தண்ணீரில் கழுவி வந்தால், சரும செல்கள் புத்துணர்ச்சி அடைவதோடு, சருமம் அழகாக, மென்மையாகவும் இருக்கும்.