திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

எளிய சரும பராமரிப்பு முறைகளும் சில அற்புத அழகு குறிப்புகளும் !!

இயற்கையான சரும பராமரிப்பு என்பது பெண்களிடையே பெரும் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. இவற்றை இயற்கையான முறையில் பெற விரும்பும் பெண்கள், இயற்கை மூலிகைகளை பயன்படுத்துவதில் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர்.

வேப்பிலை மிக சிறந்த இயற்கை மூலிகையாக கருதுகின்றனர். இது பளபளக்கும் சருமத்தை தரக்கூடிய மூலிகையாகும். பொடி செய்த வேப்பிலையுடன் ரோஜா இதழ்களை கசக்கி அதில் எலுமிச்சை சாற்றை கலந்து ஒரு கலவையாக செய்து சருமத்தில் தேய்த்து வந்தால் தோலில் ஒரு அற்புத பளபளப்பு உண்டாகும்.
 
வெண்ணெய் பழம் என்று கூறப்படும் அவகேடோ இயற்கையாக தோலில் பளபளப்பை ஏற்படுத்துவதாகவும், வறண்ட சருமம் தொடர்பான பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடிய பழமாகவும் உள்ளது. இப்பழத்தில் அதிக அளவு புரதச் சத்து இருப்பதால் தோலில் ஏற்படும் சேதங்களை குணமாக்க வல்லது.
 
மிகச் சிறந்த இயற்கை மூலிகை பட்டியலில் சந்தன கட்டையும் ஒன்று. இது ஒரு அற்புத மூலிகையாகும். மருந்துகளிலும், அனைத்து தோல் பராமரிப்பு சார்ந்த பொருட்களிலும் சந்தனம் மூலப்பொருளாக விளங்குகின்றது.
 
சந்தனம், தோலில் உள்ள வியாதிகள், முகப் பருக்கள், அரிப்பு மற்றும் இதர பிரச்சனைகளையும் குணமாக்க பயன்படுகின்றது. சந்தனத்தை வெளிபுற தோலில்  பயன்படுத்தும் போது தோலுக்கு இதமான குளிர்ச்சித்தன்மை கிடைக்கும்.