திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (09:54 IST)

பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள வெந்தயம் !!

வெந்தயத்தில் நார்ச்சத்து உள்ளதால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வெந்தயத்தில் உள்ள அமினோ அமிலங்கள், நம் உடலில் இன்சுலின் சுரப்பியை சீராக வைக்கிறது.


இரவு நேரங்களில் வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து, காலையில் தண்ணீருடன் சேர்ந்து வெந்தயத்தை குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும்.

செரிமான பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள், வெந்தயதை சாப்பிடலாம். வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.

மேலும் இது குடலியக்கத்தை மேம்படுத்துவதால், மலச்சிக்கல், அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

உடல் சூட்டினால் சில சமயங்களில் திடீரென்று வயிற்று வலி ஏற்படும். இவர்கள் வெந்தயத்தை நீரில் காய்ச்சி, சிறிதளவு தேன் கலந்து அந்த நீரை குடிக்கலாம் அல்லது வெந்தயத்தை பொடியாக்கி மோரில் கலந்து குடித்தால் வயிற்று கடுப்பு குணமாகும்.

வெந்தயம் பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கிறது. குழந்தை பெற்ற பெண்களுக்கு வெந்தயத்தை சிறிதளவு கஞ்சியில் சேர்த்து காய்ச்சிக் கொடுத்தால் பால் அதிகமாக சுரக்கும்.

வெந்தயத்தில் வைட்டமின் கே மற்றும் வைட்டமின் சி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. வெந்தயம் ஊற வைத்த நீரை குடித்து வந்தால் சருமத்தில் உள்ள கருமையான வளையங்கள் மற்றும் கொப்பளம் பிரச்சினைகளை தீர்க்கிறது.