1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

ரசாயன கழிவுகளை உடலில் இருந்து வெளியேற்ற உதவும் பெருஞ்சீரகம் !!

பெருஞ்சீரகம் தினமும் உண்பதால் ரத்தம் சுத்திகரித்து, ரசாயன கழிவுகளை உடலில் இருந்து வெளியே அகற்றுகிறது.

பெண்களுக்குப் பிரசவத்திற்குப் பிறகு முடி அதிகமாகக் கொட்டும். கொட்டாமல் இருக்க பெருஞ்சீரக எண்ணெய்யை தலையில் தேய்த்து குளித்து வந்தால், முடி கொட்டும் பிரச்சனை நீங்கும்.
 
பெருஞ்சீரகத்தை பொடியாக்கி பால் கலந்து முகத்தில் தேய்த்து வந்தால் முகப்பருக்கள் மற்றும் புண்கள் ஆகியவை மறையும்.
 
தினமும் உணவில் பெருஞ்சீரகம் சேர்த்து கொண்டால் செரிமான சீராக நடைபெறும். மலச்சிக்கல் ஏற்படாமல் தவிர்க்க முடியும். மேலும் அஜீரண பிரச்சனை நீங்கும்.
 
வயிற்றில் பூச்சி தொல்லையால் அதிக அளவு ஊட்டச்சத்துக் குறைப்பாடு காணப்படும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது. இப்பிரச்சனையில் இருந்து விடுபட பெருஞ்சீரகத்தினை பொடியாக்கி பாலில் கலந்து குடித்து வந்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் எல்லாம் வெளியேறிவிடும்.
 
சில நேரங்களில் ஏற்படும் விக்கல் தண்ணீர் குடித்தாலும் நிக்காது, அதற்கு பெருஞ்சீரகத்தை மோரில் கலந்து குடித்தால் விக்கல் நின்று விடும்.
 
நமது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க பெருஞ்சீரகம் உதவுகிறது. மேலும் கொழுப்பு சம்பந்தமான பிரச்சனை வராமல் இருக்கு உதவுகிறது.