திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

இருதயநோய் ஆபத்துக்களை குறைக்க உதவுமா பாதாம்?

பாதாமில் உள்ள நார்ப்பொருள் மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது. மங்கானிஸ், தாமிரம் மற்றும் ரிபோபிளாவின் சக்தியை உற்பத்திக்கு உதவுவதால் பாதாம் உட்கொள்பவர்கள் புத்துணர்வோடு இருப்பர்.

தினந்தோறும் பாதாம் பருப்பு உட்கொண்டு வருபவர்களுக்கு உடலில் நல்ல கொழுப்பு கூடி கெட்ட கொழுப்பு குறைகிறது. பாதாமில் உள்ள நல்ல கொழுப்பு, புரதம் மற்றும் பொட்டேஸியம் இருதயத்திற்கு நல்லது. 
 
இருதய நோய் வரும் ஆபத்துக்களைக் குறைக்கிறது. பாதாமில் உள்ள போலிக் அமிலம் தமனிகளில் கொழுப்பு படிவதைத் தடுத்து நிறுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. பாதாமில் உள்ள பொட்டஸியம் இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க உதவுகிறது.
 
பாதாமில் உள்ள சத்துக்கள் மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றன. மூளைத் திறனை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இரத்தத்தில் சீனி மற்றும் இன்சுலின்  அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதால் நீரிழிவு நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.
 
சீனி சேர்க்கப்படாத பாதாம் பால் எடையைக் குறைக்க உதவுகிறது. உடல் பருமன் உடையவர்கள் பாதாமின் துணை கொண்டு எடையைக் குறைக்க முயற்சி  செய்யலாம்.
 
முதியவர்களுக்கு ஏற்படும் ஞாபக மறதி நோயை, பாதாம் உட்கொண்டு வருவதன் மூலம் தடுக்க முடியும். பாதாம் ஒருவருடைய முகப் பொலிவைக் கூட்டுகிறது.  நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. இப்படிப்பட்ட பாதாமை உணவாகக் கொண்டால் ஆரோக்கியம் மேம்படும்.