புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் அவகேடா எண்ணெய் !!

அவகேடா எண்ணெய் நமது உடலில் உள்ள நச்சுக்களையும் வெளியேற்றுகிறது. இதிலுள்ள இயற்கையான மக்னீசியமான குளோரோபைல் என்ற பொருள் நமது உடலில் உள்ள நச்சு தாதுக்களை வெளியேற்றுகிறது.

குளோரோபைல் மூலக்கூறுகள் நமது உடலுக்கு வந்ததும் மக்னீசியம் தாதுக்களை வெளியேற்றி ஒரு வேதியியல் இணைப்பை உருவாக்கி நச்சு தாதுக்களை மலம் வழியாக வெளியேற்றி விடுகிறது. இதை சமையலிலோ அல்லது சாலட் போன்றவற்றில் சேர்த்து உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி விடலாம்.
 
மென்மையான பொலிவான சருமம் வேண்டுமென்றால் அதற்கு அவகேடா எண்ணெய் ஒரு சிறந்த பலனை தரும். இந்த எண்ணெய்யில் உள்ள தாதுக்கள் மற்றும் விட்டமின்கள் உங்கள் சருமத்தை பளபளப்பாக்கி ஜொலிக்க வைக்கும்.

தினமும் இந்த எண்ணெய்யை மாய்ஸ்சரைசர் மாதிரி உங்கள் உடலில் தடவி வந்தால் நல்ல ஆரோக்கியமான சரும செல்களை பெற முடியும்.
 
இதில் பொட்டாசியம், லெசிதின், விட்டமின் ஈ போன்றவை உள்ளன. இந்த எண்ணெய்யை சருமத்தில் தடவும் போது அப்படியே சரும உள் அடுக்களில் ஊடுருவி புதிய செல்களை உருவாக்குகிறது. மேலும் ஏற்கனவே உள்ள சரும செல்களை பாதுகாக்கவும் செய்கிறது.
 
அவகேடா எண்ணெய் சருமத்திற்கு மட்டுமல்ல உங்கள் கூந்தலுக்கு ம் சிறந்தது. இதில் பொட்டாசியம், லெசிதின், விட்டமின் ஈ போன்றவை கூந்தலுக்கு போதுமான ஈரப்பதத்தை கொடுப்பதோடு மென்மையாக்குகிறது.

வாரத்திற்கு ஒரு முறை முடியை அலசும் போது சில சொட்டுகள் அவகேடா எண்ணெய்யை தலையில் தேய்த்து மசாஜ் செய்து கொள்ளலாம். இதனால் உங்கள் கூந்தல் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் மாறும். முடி வளர்ச்சியும் நன்றாக இருக்கும். புதிய முடி வளர்ச்சியும் தொடங்கும்
 
அவகேடா எண்ணெய் சூரியனால் சருமத்தில் ஏற்படும் பாதிப்பு, பூச்சு கடி, பொடுகு, எக்ஸிமா, சோரியாஸிஸ், வெடிப்பு, கெரட்டோஸிஸ், பில்லரிஸ் போன்ற அழற்சி பிரச்சினைகளையும் சரி செய்கிறது. இதிலுள்ள மேனோசேச்சுரேட் ஒலீயிக் அமிலத்தை சருமத்தில் தடவும் போது நல்ல பலனை கொடுக்கும்.