ஞாயிறு, 2 பிப்ரவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (17:09 IST)

பல மருத்துவ குணங்களை கொண்டுள்ள கிராம்பு !!

Clove
சமையலுக்கு பயன்படுத்தப்படும் கிராம்பில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. ஆயுர்வேத முறைப்படி, கிராம்பு இரத்த ஓட்டம், செரிமானம் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.


கிராம்பில் கார்போ ஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன. இருமல், குரல் வளை அழற்சி, தொண்டை வலி மற்றும் ஜலதோஷம் போன்ற மேல் சுவாசக் கோளாறுகளை போக்க கிராம்பு உதவுகிறது.

வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் தினமும் இரண்டு கிராம்பை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றத்தை போக்க முடியும்.

கிராம்பை வாயில் போட்டு மென்று வரும் போது இரைப்பை எரிச்சல், வாய்வுத் தொல்லை போன்றவற்றை சரி செய்யும். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை பாதிக்கும் ப்ரீ ரேடிக்கலை எதிர்த்துப் போராட உதவுகிறது.

கிராம்பு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலினுள் ஊடுருவும் நோய்க்கிருமிகளை எதிர்த்து போராட உதவுகிறது. கிராம்பு அதிகம் எடுத்துக்கொண்டால் திடீரென்று ரத்த சர்க்கரை அளவு குறையலாம். அதனால் கவனமாக எடுப்பது நல்லது.