வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (11:26 IST)

வீட்டிலேயே ரோஜா இதழ்களை பயன்படுத்தி ரோஸ் ஃபேஸ் பேக் செய்வது எப்படி...?

Rose Face Pack
ரோஜா இதழ்களை போன்று மென்மையாகவும், பளபளப்பாகவும் சருமத்தைப் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் பன்னீர் ரோஜா இதழ்களோடு தயிர், தேன், கற்றாழை, சந்தனப்பவுடர் போன்றவற்றை பயன்படுத்தி வீட்டிலேயே ரோஸ் பேக் செய்யலாம்.


ரோஜா இதழ்களில் இயற்கையாகவே பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் மற்றும் வைட்டமின் சி போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் சருமப் பிரச்சனைக்குத் தீர்வாக அமைவதோடு முக பருக்களையும் எதிர்த்துப் போராடுகிறது.

தயிரில் உள்ள லாக்டிக் அமிலங்கள் இயற்கையாகவே முகத்திற்கு பிரகாசம் தரும் பண்புகளைக் கொண்டதால், சருமத்திற்குப் பொலிவை நிச்சயம் தரும் தன்மையைக் கொண்டுள்ளது. எனவே ரோஸ் பேக் செய்யும் போது தயிரை தாராளமாகப் பயன்படுத்தலாம். முதலில் ரோஜா இதழ்களை தனியாக எடுத்து மிக்ஸியில் அரைத்து பேஸ்டாக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அந்த பேஸ்டுடன் தேன், ஒரு தேக்கரண்டி தயிர் மற்றும் இரண்டு தேக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும். வழக்கம் போல சருமத்தில் உபயோகித்து முக பளபளப்பை பெறமுடியும்.

தயிர் மற்றும் ரோஸ் பேக்: தயிரில் உள்ள லாக்டிக் அமிலங்கள் இயற்கையாகவே முகத்திற்கு பிரகாசம் தரும் பண்புகளைக் கொண்டதால், சருமத்திற்குப் பொலிவை நிச்சயம் தரும் தன்மையைக் கொண்டுள்ளது. எனவே ரேஸ் பேக் செய்யும் போது தயிரை தாராளமாகப் பயன்படுத்தலாம். செய்முறை: முதலில் ரோஜா இதழ்களை தனியாக எடுத்து மிக்ஸியில் அரைத்து பேஸ்டாக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அந்த பேஸ்டுடன் தேன், ஒரு தேக்கரண்டி தயிர் மற்றும் இரண்டு தேக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும். சருமத்தில் உபயோகித்து முக பளபளப்பை பெறமுடியும்.