செவ்வாய், 21 மார்ச் 2023
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (15:22 IST)

செம்பு பாத்திரத்தில் நீரை வைத்து குடிப்பதால் என்ன பலன்கள் !!

செம்பு பாத்திரத்தில் உள்ள நீரை அருந்தினால் உடலிலுள்ள வாதம், பித்தம், கபம் என்ற மூன்றையும் சமப்படுத்தி, உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன், உடலின் அமிலத்தன்மையையும் கட்டுப்படுத்தும்.


இதன் முழு பயன்களையும் பெறுவதற்கு,  இரவிலேயே செம்பு பாத்திரல் அல்லது பாட்டிலில் நீரை நிரப்பி வைத்துக் கொள்ள வேண்டும். காலை வரை அந்த நீரானது செம்புப் பாத்திரத்தில் இருக்கும்போது அப்போது, காப்பர் அயான்ஸ் எனப்படும் ஒருவகையான திரவம் சிறிய அளவில் நீரில் கலக்கிறது. இது,  நீரில் உள்ள பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண் கிருமிகளை அழித்து நீரைச் சுத்திகரிக்கின்றது.

வயிற்றிலுள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாவை அழித்து, வீக்கத்தைக் குறைக்கும் தன்மை செம்பிற்கு உண்டு. அத்துடன் வயிற்றுப் புண், வயிறு உப்புசம், செரிமானக் கோளாறு, வாய்வு போன்றவற்றை நீக்குகின்றது.

உடலில் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, பாக்டீரியா, வைரஸ் ஆகியவற்றை எதிர்த்துப் போராடுகின்றது. இரத்தத்தில் உள்ள இரும்புத் தாதுகளை உறிஞ்சுவதால் புதிய அணுக்கள் உருவாகின்றன. இத்தகைய செயல்பாட்டிற்குச் செம்பு முக்கிய பங்கு வகிக்கின்றது.

ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ள இந்த நீர், உடலில் புதிய  மற்றும் ஆரோக்கியமான அணுக்களை உருவாக்குவதற்கு துணைபுரிகிறது. இதனால் முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள், கோடுகள் ஆகியவற்றை நீக்கிச் சருமத்தைப் பொலிவாகவும், அழகாகவும் வைத்துக்கொள்ள இது ஓர்  இயற்கையான தீர்வு. புற்று நோய் வருவதிலிருந்து நம்மைக் காக்கும்.