தொடர்புடைய செய்திகள்
- அழகுக்காக வீடுகளிலும் வளர்க்கப்படும் சங்குப்பூவில் உள்ள மருத்துவ நன்மைகள் !!
- உடம்பிலுள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை நீக்க உதவும் கொத்தமல்லி ஜூஸ் !!
- மருதாணி பூக்களின் மருத்துவ பயன்கள் குறித்து தெரிந்துக்கொள்வோம் !!
- சீத்தாபழத்தில் உள்ள சத்துக்கள் எதற்காக பயன்படுகிறது தெரியுமா...?
- ஆச்சரியப்படும் அளவுக்கு அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள கிராம்பு !!
சிறுநீரக பிரச்சனைகள் ஏதும் வராமலிருக்க செவ்வாழை பயன்படுமா...?
செவ்வாழையில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக இதில் பீட்டா-கரோட்டீன் மற்றும் விட்டமின் சி வளமாக உள்ளது.
பீட்டா-கரோட்டீன் தமனிகள் தடிமனாவதைத் தடுக்கும் மற்றும் உடலை இதய நோய், புற்றுநோயின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும்.
பீட்டா-கரோட்டீன் உடலினுள் செல்லும் போது விட்டமின் ஏ-வாக மாற்றப்பட்டு, கண்களின் ஆரோக்கியத்தையும், நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும், சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
செவ்வாழையில் மற்ற வாழைப்பழங்களை விட கலோரிகள் மிகவும் குறைவு. எனவே எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் ஒரு செவ்வாழையை காலையில் உட்கொண்டு வந்தால், பசி நீண்ட நேரம் எடுக்காமல் இருக்கும்.
செவ்வாழையில் உள்ள விட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இரத்தணுக்களின் அளவை சீராகப் பராமரிக்கும்.
நெஞ்செரிச்சலால் கஷ்டப்படுபவர்கள் தினமும் செவ்வாழையை உட்கொண்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும். இதில் இயற்கையாக ஆன்டாசிட் தன்மை உள்ளது. இதனால் இப்பழத்தை தினமும் உட்கொண்டு வர நெஞ்செரிச்சல் பிரச்சனை நீங்கும்.
செவ்வாழை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. செவ்வாழையில் பொட்டாசியம் அதிகம் உள்ளது.
இதய நோய் மற்றும் புற்றுநோய் தாக்குதலைத் தடுக்கும். மேலும் இது உடலில் கால்சியம் உறிஞ்சுவதை அதிகரித்து, எலும்புகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். எனவே உங்களுக்கு சிறுநீரக பிரச்சனைகள் ஏதும் வராமலிருக்க தினமும் ஒரு செவ்வாழையை உட்கொண்டு வாருங்கள்.
அடுத்த கட்டுரையில்
