அழகுக்காக வீடுகளிலும் வளர்க்கப்படும் சங்குப்பூவில் உள்ள மருத்துவ நன்மைகள் !!
சங்குப்பூ கொடியாக வளரும். இயலுபுடையது. அழகுக்காக வீடுகளிலும் வளர்க்கப் படுகின்றது. தட்டையான காய்களையுடையது. பொதுவாக மருத்துவத்திற்கு வெண்ணிறப் பூக்களையே பயன்படுத்துகின்றனர்.
சங்குப்பூவின் அனைத்து பாகங்களும் அற்புத மருத்துவ பயன்களை கொண்டது. இதன் இலை, வேர் மற்றும் விதை முதலியவை மருத்துவகுணம் கொண்டவை. இது புளிப்புச்சுவை கொண்டதாக இருக்கும்.
இது சிறுநீர் பெருக்கும், குடற்பூச்சிகளை கொல்லும். தாது வெப்பு அகற்றும். வாந்தி, பேதி, தும்மல் ஆகியவற்றை குணப்படுத்தும். இரத்த குழாய் அடைப்பு நீங்கும்.
அழகுக்காக வளர்க்கப்படும் சங்குப்பூக்கள், இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பைக் குணமாக்கும். சங்குப்பூக்களை பறித்து தண்ணீரில் 24 மணிநேரம் ஊறவைத்து அந்த தண்ணீரை குடித்துவர இரத்தக்குழாயில் உள்ள அடைப்பு நீங்கும்.
ஊதா நிற சங்குப்பூவின் வேரை பாலில் வேகவைத்து உலர்த்தி பாதியளவு சுக்குடன் பொடித்து காலை மாலை 2 சிட்டிகை வெந்நீருடன் கொள்ள வாத நோய், வாயுவலி, சீதளம் நீங்கும்.
சங்குப்பூவின் வேர்ப் பட்டையை ஊறவைத்த ஊறல் குடிநீரை முப்பது மி.லி. முதல் அறுபது மி.லி. வீதம் அருந்தி வர, சிறுநீர்ப்பை நோய்களும் சிறுநீர்ப் பாதை எரிச்சல் மற்றும் வலி முதலிய நோய்களும் குணமாகும்.