1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

சீத்தாபழத்தில் உள்ள சத்துக்கள் எதற்காக பயன்படுகிறது தெரியுமா...?

சீத்தாபழத்தில் வைட்டமின், புரதம் மற்றும் இரும்புச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. இது அதிக அளவு மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. இதய நோய் வராமல் தடுக்கும். நினைவாற்றலை அதிகரிக்கும்.

ஆரம்ப நிலை காசநோயை உடலில் இருந்து நீக்கும். மற்ற வகை காசநோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் உடையது. உடல் எடையைக் குறைக்கும். கோடை காலத்தில் ஏற்படக் கூடிய நாவறட்சியை நீக்கும். உடலுக்கு குளிர்ச்சி தரும் தன்மை உடையது.
 
உடல் உள்உறுப்புக்களில் ஏற்படும் புண்களை ஆற்றும் தன்மை இதில் உள்ளது. ஊற வைத்த வெந்தயத்துடன் சீத்தாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் குடல் புண்கள் ஆறும். சீத்தாப்பழம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.
 
சீத்தாப்பழத்தில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம் ஆகிய இரண்டும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகின்றது. நமது உடலில் உள்ள ரத்த நாளங்களை விரிவடையச் செய்ய ஊக்குவிக்கின்றது. ரத்த அழுத்தமானது சீராக்கி இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.
 
உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து ரத்தசோகை நோயை போக்கும். அதுமட்டுமின்றி உடல் சோர்வைப் போக்கி உடலுக்கு புத்துணர்வை தரும். உடல் வலிமை பெற சீத்தாப்பழத்தை திராட்சை பழச்சாற்றுடன் கலந்து ஜூஸாக பருகி வரலாம்.
 
சீத்தாப்பழத்தில் தாமிரச் சத்தும் அதிகம் இருப்பதால் செரிமானத்திற்கு நன்கு உதவுகிறது. ஆகவே மலச்சிக்கல் வராமல் தடுத்து உடல் இயக்கத்திற்கு பயன்படக்கூடிய நன்மை பயக்கக்கூடிய பாக்டீரியாக்களை அதிகரிக்கின்றது.