வியாழன், 21 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

மருதாணி பூக்களின் மருத்துவ பயன்கள் குறித்து தெரிந்துக்கொள்வோம் !!

சுத்தம் செய்த மருதாணிப்பூக்களை தேங்காய் எண்ணெயில் போட்டு பூக்கள் சிவக்கும் வரை காய்ச்சி இறக்கி ஆறவிட்டு பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.


இந்தத் தைலத்தை தினசரி தலைக்குத் தடவி வந்தால் நாள்பட்ட தலைவலி நீங்கும். கூந்தல் செழிப்பாகும். தலைவழுக்கையும் மறையும்.
 
இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் மருதாணிப் பூக்களை கொத்தாகப் பறித்து வந்து தலையணைக்கடியில் வைத்து படுத்தால் நன்றாக உறக்கம் வரும்.
 
இதனால் உடல் வெப்பமும் தணியும். மருதாணிப் பூச்சாறு அரை தேக்கரண்டியளவு எடுத்து அரை டம்ளர் காய்ச்சி ஆறவைத்த பசும் பாலில் கலந்து பருக கை, கால்வலி குணமடையும்.
 
கால் கிலோ மருதாணிப் பூக்களை அரை லிட்டர் வேப்பெண்ணெய்யில் போட்டு காய்ச்சி வாத வலியுள்ள பகுதிகளில் தடவி வர பக்க வாத நோய் குணமடையும். 
 
சரும வியாதிகளுக்கு காலில் தோன்றக்கூடிய தேமல் மற்றும் கரப்பான் புண்களுக்கு மருதாணிப்பூவை அரைத்து புண்கள் மீது பற்றுப்போட விரைவில் ஆறும். எக்ஸிமா என்னும் சரும நோய்க்கும் மருதாணிப்பூவுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து பற்றுப்போட விரைவில் குணமாகும்.