1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 23 பிப்ரவரி 2022 (16:20 IST)

உடைத்த கடலை பருப்புகளை சாப்பிடுவதால் உண்டாகும் பயன்கள் !!

பொட்டுக்கடலையில் உள்ள ஊட்டச்சத்துகள் நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. உடைத்த கடலை பருப்பில் மாங்கனீஸ், பாஸ்பரஸ், போலேட் மற்றும் காப்பர் போன்ற இதய நோய்களை குறைக்கும் சத்துக்களும் உள்ளன.


இதயம் ஆரோக்கியமாக இருக்க புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். புரத சத்து அதிகம் நிறைந்த பொட்டுக்கடலையை அடிக்கடி சாப்பிடுவதால் இதய நலம் மேம்படும்.

உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும், உள்ளுறுப்புகளை சுத்தம் செய்து ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. அடிக்கடி உடல்நலக் குறைவால் பாதிக்கப்படுகின்றவர்கள், உடைத்த கடலை பருப்புகளை சாப்பிட்டுவந்தால் நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்.

உடைத்த கடலை பருப்பை சாப்பிட்டால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, உயரதிற்கு ஏற்ற உடல் எடையை பெற உதவுகிறது. உடல் பருமன் உள்ளவர்கள் பொட்டுக்கடலையை சாப்பிட்டால் உடல் எடை குறையும், உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

உடைத்த கடலை பருப்பை சாப்பிட்டு வந்தால் இதில் உள்ள புரதங்கள் மற்றும் இதர சத்துக்கள் நரம்பு சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது.