1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. வியாதிகள்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (17:57 IST)

சிறுநீரகம் தொடர்பான நோய்களை குணமாக்கும் சிறு நெருஞ்சில் மூலிகை !!

மஞ்சள் நிற மலர்களையுடையது சிறு நெருஞ்சில். இதன் பூக்கள், சூரியன் இருக்கும் திசைநோக்கித்  திரும்பும் தன்மையுடையவை. காய் முற்றும்போது முள்ளுடன் இருக்கும்.


சிறு நெருஞ்சில் ஏராளமான நோய்களைக் குணப்படுத்தக்கூடியது. இதன் வேரை எலுமிச்சைப் பழத்தின் சாறு விட்டு அரைத்துக்  குடித்து வந்தால் உரிய வயதில் பூப்பெய்தாத பெண்களுக்குத் தீர்வு கிடைக்கும்.

நெருஞ்சில் இலைகள் 50 கிராம் எடுத்து, அரை லிட்டர் தண்ணீர் விட்டுப் பாதியாகும் அளவு காய்ச்சி தினமும் காலையில் அருந்தி வந்தால் பெண்களின் கர்ப்பப்பைக் கோளாறுகள் நீங்குவதுடன் குழந்தைப்பேறு உண்டாகும்.

நெருஞ்சில் செடியை நிழலில் உலர்த்திச் சூரணம் செய்து இரண்டு கிராம் அளவு, பாலுடன் கலந்து காலை மாலை இரண்டு வேளையும் குடித்து வந்தால் வெட்டை நோய் குணமாகும்.

நெருஞ்சில் முள்ளைப் பசும்பாலில் வேகவைத்து உலர்த்திப் பொடியாக்கி இரண்டு கிராம் அளவு எடுத்துப் பாலுடன் சேர்த்து காலை மாலை இரண்டுவேளை குடித்து வந்தால் உடல் பலம் பெறுவதுடன் தாம்பத்யப் பிரச்னைகள் தீரும். இதன் இலையை வெள்ளாட்டுப் பாலுடன் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டித் தேன் சேர்த்துக் குடித்து வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.

நெருஞ்சில் முள்ளை தண்ணீர் விட்டுக் கஷாயமாக்கிக் குடித்து வந்தால் சிறுநீரகம் தொடர்பான நோய்கள் குணமாகும். குறிப்பாக, சிறுநீரகக் கல்லைக் கரைத்து சிறுநீர் தடையின்றி போகச் செய்யும். கர்ப்பிணிகளுக்கு வரும் சிறுநீர்ப் பிரச்னையையும் இது குணமாக்கும்.