வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 23 பிப்ரவரி 2022 (12:07 IST)

ஆவாரம் பூ சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன...?

ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ என்பது பழமொழி. இந்த பழமொழிகேற்ப அதிக மருத்துவ பயன்களை தருகின்றன.


ஆவாரம் பூ இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கிறது. ஆவாரம் பூவை நிழலில் உலர்த்தி சேமித்து வைத்துக்கொண்டு, இதை கசாயம் செய்து குடிதால் நல்ல பலன் கிடைக்கும்.

ஒரு டம்ளர் தண்ணீரில் ஆவாரம் பூவை  போட்டு, தண்ணீர் பகுதியாக வரும் வரை கொதிக்கவைத்து, அதை காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து சரியான அளவில் பராமரிக்கிறது.

உடல் துர்நாற்றம் நீங்க சிறிதளவு ஆவாரம் பூக்களை எடுத்து நன்றாக அரைத்து உடல் முழுவதும் பூசி அரை மணி நேரம் கழித்து குளித்து வரலாம். இவ்வாறு குளித்து வந்தால் உடல் துர்நாற்றம் நீங்குவதோடு, சொறி, அரிப்பு போன்றவற்றையும் நீக்கும்.

ஆவாரம் பூவை காயவைத்துசிறிதளவு தயிரில் போட்டு அரைத்து முகத்திற்கு பூசி சிறிது நேரம் கழித்து முகம் கழுவி வந்தால் முகத்தில் இருக்கும் வடுக்கள், எண்ணெய் தன்மை போன்றவை நீங்கி முகம் பொலிவு பெரும்.

ஆவாரம் பூவில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் குடலில் ஏற்படும் அழற்சியை குணப்படுத்துவதோடு, இரைப்பையில் நச்சுகள் தேங்காமல் இருக்கவும் உதவுகிறது.