வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 23 பிப்ரவரி 2022 (10:23 IST)

கேழ்வரகு கொண்டு செய்யப்பட்ட உணவுகளின் ஆரோக்கிய நன்மைகள் !!

அதிக ஆரோக்கிய நன்மைகளை தரக்கூடியதாகவும் சிறுதானியங்கள் உள்ளன. அவற்றில் கேழ்வரகும் சிறுதானிய வகையை சேர்ந்தது.


கேழ்விரகு கொண்டு செய்யப்பட்ட உணவுகளில் அதிக அளவில் புரதச்சத்துக்களும் கனிமச் சத்துக்களும் உள்ளதால், இவை உடல் வலிமை மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

கேழ்வரகு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால், உடல் உஷ்ணம் அதிகரிப்பதை தடுக்கும். கேழ்வரகு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் பற்கள், எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

கேழ்வரகில் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால், இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் வேலைப்பளு நிறைந்தவர்கள் கேழ்வரகு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வர மன அழுத்தத்திலிருந்தும் விடுபடலாம்.

உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்த்து, உடற்பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டும். இவர்கள் உடல் எடை குறைக்க கேழ்வரகில் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடலாம்.

கேழ்வரகு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும். குழந்தை பெற்ற பெண்களுக்கு உடலில் சக்தி அதிகம் தேவைப்படும், இவர்கள் கேழ்வரகை சாப்பிடுவதால் உடல் சக்தி பெருகும்.