வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 23 பிப்ரவரி 2022 (10:03 IST)

உடல் எடையை உதவும் அற்புத மருத்துவ குறிப்புகள் !!

பொதுவாக கடைகளில் கிடைக்கும் சர்க்கரையை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் கடைகளில் கிடைக்கும் சர்க்கரையானது சுத்திகரிப்பு என்ற பெயரில் செயற்கை ரசாயனங்களை அதிகம் உபயோகிக்கின்றனர். இதை தவிர்ப்பது நல்லது.


சர்க்கரைக்கு பதில் இயற்கை முறையில் கிடைக்கும் தேன், பனங்கற்கண்டு மற்றும் அதிமதுர சாறு ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

உடலில் உள்ள கொழுப்புகளை சக்தியாக மாற்றும் கார்னிடைன் என்ற பொருளை சுரப்பதற்கு உதவும் வைட்டமின் சி மிகவும் அவசியமானதாக உள்ளது.

அது மட்டுமல்லாமல் மன அழுத்தத்தால் சுரக்கப்படும் கார்டிசாலையும் வைட்டமின் சி கட்டுப்படுத்துகிறது. இந்த கார்டிசால் தான் வயிற்று கொழுப்பு அதிகரிப்பதற்கு மிக முக்கிய காரணமாகும். எனவே வைட்டமின் சி நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வது மிகவும் நல்லது.

பூண்டு, வெங்காயம், இஞ்சி, சிவப்பு மிளகு, கோஸ், தக்காளி, மற்றும் இலவங்கப்பட்டை, கடுகு, கிராம்பு ஆகியவை கொழுப்பை கரைக்க உதவுகின்றன.

சிறிது கிராம்பு, பச்சை பூண்டு மற்றும் ஒரு அங்குல அளவிற்கு இஞ்சி ஆகியவற்றை கலந்து தினமும் காலை சாப்பிட்டு வந்தால் கொழுப்பை நிச்சயம் கரைக்க முடியும். வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் எலுமிச்சை சாறு மற்றும் தேனை கலந்து,  காலையில் வெறும் வயிற்றில் அருந்துவதும் கொழுப்பை குறைக்கும் சிறந்த வழியாகும்.

உடல் எடையை மேம்படுத்த தூக்கம் மிகவும் அவசியமாகும். மனிதனுக்கு 6 முதல் 8 மணி நேர உறக்கம் அவசியம் தேவை. உறங்காமல் இருப்பதும் உடல் எடையை கூட்டுவதாக உள்ளது. இத்தகைய எளிய வழிகளை பின்பற்றினால் வயிற்றுக் கொழுப்பை மட்டுமல்ல, முழு உடல் எடையை குறைக்க முடியும்.