தாயானார் நடிகை சமந்தா! மகனுக்கு என்ன பெயர் சூட்டியுள்ளார் தெரியுமா?
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சமந்தா ரூத் பிரபு - இயக்குநர் ராஜ் நிடிமோரு தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த இனிய செய்தியை சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
நேற்று (நவம்பர் 19) தங்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ள இந்தத் தம்பதி, தங்களது முதல் குழந்தைக்கு தேவ் நிடிமோரு எனப் பெயரிட்டுள்ளனர். குழந்தையின் பிஞ்சு விரல்களைத் தாங்கள் பிடித்திருக்கும் அழகான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள சமந்தா, "எங்கள் மகன் தேவ் நிடிமோரு நவம்பர் 19-ம் தேதி பிறந்தான். இதுவரை உணர்ந்திராத எல்லையற்ற மகிழ்ச்சியால் எங்கள் இதயங்கள் நிறைந்துள்ளன என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில், நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் சமந்தா மற்றும் ராஜ் நிடிமோருவின் திருமணம் எளிமையாக நடைபெற்றது. இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் தாய்மை அடைந்திருப்பதை சமந்தா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். சமீபத்தில் இவரது வளைகாப்பு விழா புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வந்தன.
தற்போது தாய்மைப் பேறு அடைந்துள்ள சமந்தா - ராஜ் தம்பதிக்குத் திரையுலகப் பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்களது வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.

