1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : சனி, 13 மார்ச் 2021 (21:53 IST)

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளபோது புதிய திட்டங்களை அறிவிப்பதா? காங்கிரஸ் புகார்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது புதிய திட்டங்களை அறிவிப்பதா என கேரள முதல்வர் மீது காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சமீபத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது என்பதும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மீது எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் புதிய திட்டங்களை முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் கேரள முதல்வர் அறிவித்த ஒரு திட்டத்திற்கு எதிராக தான் இந்த புகாரை எதிர்க்கட்சி தலைவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது