முதல்வர் மம்தா பானர்ஜி மீது தாக்குதல்...மாநிலத்தில் பரபரப்பு

Sinoj| Last Modified புதன், 10 மார்ச் 2021 (19:35 IST)

தமிழகத்தைப் போல் விரைவில்
மேற்கு வங்க மாநிலத்திலும் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.


அங்கு மீண்டும் திரிணாமுள் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரவேண்டுமென தீவிரமாகப் பிரச்சாரத்தில்
ஈட்டுபட்டுள்ளார்.

அதேபோல் பாஜகவும் அம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நந்திகிராம் தொகுதியில் பரப்புரைக்குச் சென்ற அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை சில மர்ம நபர்கள் தள்ளிவிட்டனர். அதில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளாதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அங்குப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :