வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 21 டிசம்பர் 2019 (13:52 IST)

வினோத கண்டனமாவுல இருக்கு... ஷூவை துடைத்து முத்தம் கொடுத்த எம்பி

ஆந்திர மாநில எம்பி கோரண்ட்லா மாதவ் காவலரின் ஷூவை துடைத்து முத்தம் கொடுத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 
ஆந்திர மாநிலம் அனந்தபூரில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.பி.யான கோரண்ட்லா மாதவ்  செய்தியாளர்களின் சந்திப்பின் போது காவலர் ஒருவரின் காலணியை எடுத்து சுத்தமாக துடைத்து அதற்கு முத்தம் கொடுத்தார். இதன் பின்னர் அவர் பேசியது பின்வருமாறு... 
 
தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் போலீசாரை தனது காலணிகளை நாவால் சுத்தம் செய்ய வைக்கப்போவதாக அந்தக் கட்சி எம்.பி.யான திவாகர் ரெட்டி பேசினார். அதற்கு கணடன் தெரிவிக்கும் வகையில் நான் இதை செய்துள்ளேன் என தெரிவித்தார். 
 
இந்த குறிப்பிட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.