1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: திங்கள், 16 டிசம்பர் 2019 (19:17 IST)

முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவித்து ... பின்னோக்கி நடந்து சென்ற சந்திரபாபு நாயுடு !

ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சிக்கு எதிராக முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு  தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியினர் பின்னோக்கு நடக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆந்திர மாநிலத்தில், சட்ட சட்டசபையின் குளிர்கால கூட்டம் இரண்டு நாள் விடுமுறைக்கு  பின் நடந்து வருகிறது. 
 
இதில், சட்டமன்ற வளாகத்தில் உள்ள தீயணைப்பு அலுவலகம் முதல் சட்டமன்ற கட்டடம் வரை ஆந்திராவின்  முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது கட்சி எம்.எல்.ஏக்களுடன் பின்னோக்கி நடந்து செல்லும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசில் மாநிலத்தின் வளர்ச்சிக்கான பணிகள் அனைத்தும் பின்னோக்கிச் செல்வதாக கூறி போராடினர் என்பது குறிப்பிடத்தக்கது.