திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 16 டிசம்பர் 2019 (12:53 IST)

ரிவர்ஸ் கியரில் ஜெகன் ஆட்சி: வினோதமாய் செயல்பட்ட சந்திரபாபு நாயுடு!

ஜெகம் மோகன் ரெட்டியின் தலைமையிலான அரசை எதிர்த்து எதிர்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு நூதன போராட்டத்தை நடத்தி உள்ளார். 
 
கடந்த சட்டசபை தேர்தலின் போது ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடுவை தோற்கடித்து ஆட்சியை கைப்பற்றினார். இதனைத்தொடர்ந்து தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வந்தார் ஜெகன். அதே சமயம் சந்திரபாபு நாயுடுவிற்கும் நெருக்கடி கொடுத்து வந்தார். 
 
இந்நிலையில், ஆந்திராவில் ஜெகன் மோகன் தலைமையிலான அரசு மாநிலத்தின் வளர்ச்சியை பின்னோக்கி இட்டுச் செல்வதாகக் கூறி, தெலுங்கு தேசம் கட்சியினர் பின்னோக்கி நடந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், அனைவரும் பின்னோக்கி நடந்து அரசுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.