ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 15 டிசம்பர் 2019 (13:50 IST)

ஜெகன் மோகன் ரெட்டி ஃபார்முலாவை ஃபாலோ பண்ணுங்க மோடி ஜீ!

ஆந்திராவில் அமல்படுத்தப்பட்ட திஷா சட்டத்தை இந்தியா முழுவதும் அமல்படுத்த டெல்லி மாநில மகளிர் ஆணைய தலைவி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதுப்போன்ற பாலியல் குற்றங்களை தடுப்பதற்காக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி புதிய சட்டம் ஒன்றை ஆந்திர சட்டசபையில் நிறைவேற்றியுள்ளார். அதன்படி பாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாட்களுக்குள் விசாரணையை மேற்கொண்டு தூக்கிலிடப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டத்திற்கு பலர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தூக்கு தண்டனைக்கு எதிராக போராடி வரும் மனித நேய ஆர்வலர்கள் சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

ஆந்திர முதல்வரின் இந்த புதிய சட்டத்தை வரவேற்றுள்ள டெல்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மலிவால் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் நாட்டில் பாலியல் குற்றங்களை ஒழிக்க ஆந்திர அரசு இயற்றிய சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.